வவுனியாவில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் நேற்று விற்பனை செய்யப்பட்ட உளுந்து வடை ஒன்றிற்குள் சட்டை ஊசி ஒன்று காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த வடை வாங்கிய நபர் உணவக முகாமையாளரிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், இது தவறுதலாக இடம்பெற்றுள்ளதாகவும், இனிவரும் காலத்தில் இவ்வாறு நடைபெறாது எனவும் கூறி வடையை வாங்கியவரிடம் சைவ உணவக முகாமையாளர் மன்னிப்பு கோரியுள்ளார்.