பிரதான செய்திகள்

வவுனியாவில் இரு மாணவர்கள் முதலாமிடம்

தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியில் வவுனியா, செட்டிகுளம் கோட்டத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு சேனநாயக்க வித்தியாலயத்தில் தேசிய மட்ட தமிழ் தினப் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

இதன்படி, வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வி.ம.ஆர்த்தனா பிரிவு – 5இல் கவிதை ஆக்கத்தில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும், வவுனியா, மாணிக்கவாசகர் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வன் அ.அனுசாந்த் பிரிவு – 4இல் கவிதை ஆக்கத்தில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினையும் பெற்று தங்கப் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

வவுனியா, செட்டிகுளம் கோட்டத்தில் தேசிய ரீதியில் தனி ஆக்கத்தில் குறித்த நிகழ்வில் தங்கப் பதக்கம் பெறப்பட்டமை இதுவே முதல்தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட சமுர்த்தி பயனாளிகள்! பழைய படி முத்திரை வழங்க வேண்டும்

wpengine

கனிய மணல் தொழில் சங்கத்தை சந்தித்த அமைச்சர் றிஷாட்

wpengine

உயர் தரப் பரீட்சையில் திறமையான தேர்ச்சியை பெறுகின்ற மாணவர்களுக்கு வெளி நாட்டு பல்கலைக் கழகங்களில் பயில வாய்ப்பு.

Maash