வவுனியாவிலிருந்து செட்டிக்குளம் செல்லும் பஸ்ஸில் பாலியல் தொல்லை! விசனம்

வவுனியாவிலிருந்து செட்டிக்குளம் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் இரவு நேரத்தில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருவதாக பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.


வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் ஊடாக செட்டிக்குளம் மெனிக்பாம் நோக்கி இரவு 8.00 மணிக்கு பயணிக்கும் இ.போ.ச பேருந்திலேயே மேற்படி சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.


வவுனியாவிலிருந்து புறப்படும் பேருந்தில் பயணிக்கும், சில இளைஞர்கள் பேருந்தில் வைத்து மது அருந்தி வருவதுடன், பேருந்தில் பயணம் செய்யும் பெண்களுடன் பாலியல் சேட்டை விடுவதாவும், இச்செயற்பாட்டை சாரதி மற்றும் நடத்துநர் கண்டுகொள்வதில்லை என பயணிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.


வவுனியா இலுப்பையடி சந்தியிலிருந்து இரவு புறப்படும் குறித்த பேருந்து பூவரசங்குளம் எட்டாம் கட்டையில் அமைந்துள்ள மதுபாசாலைக்கு முன்பாக நிறுத்தப்பட்டு குறித்த இளைஞர்களால் மது கொள்வனவு செய்யப்பட்டதன் பின் அரச பேருந்து தொடர்ந்து செட்டிக்குளம் நோக்கி பயணிப்பதாகவும், குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர்கள் குறித்த சமூகவிரோத கும்பலுக்கு ஆதரவாக செயற்படுவதாக பாதிக்கப்பட்ட பயணிகள் தெரிவிக்கின்றனர்.


இச்சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், பொலிஸார் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன் வடபிராந்திய போக்குவரத்து அமைச்சிற்கும் இச்சம்பவம் தொடர்பாக தெரிவிக்கபப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares