பிரதான செய்திகள்

வவுனியா,பட்டாணிச்சூர் பகுதியில் வாகன விபத்து! மூவர் வைத்தியசாலை

வவுனியா – பட்டாணிச்சூர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் இன்றைய தினம் மாலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது

வவுனியாவில் இருந்து நெளுக்குளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் வேப்பங்குளத்திலிருந்து வவுனியா நகருக்கு சென்ற மோட்டார் சைக்கிளும் பட்டாணிச்சூர் முதலாம் ஒழுங்கைக்கு அருகே எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானது.

 

இவ்விபத்தில் இரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலை விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.​

Related posts

றிஷாட் கல்முனை விஜயம்! அபிவிருத்திக்கு தடையான முஸ்லிம் காங்கிரஸ் கட்சி

wpengine

நுண்கடன் திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த அமைச்சர் றிஷாட் பேச்சுவார்த்தை

wpengine

நல்லாட்சி அரசாங்கத்துக்கு புதிய குத்தகை வாழ்க்கை நீடிப்பு கிடைத்துள்ளது.

wpengine