பிரதான செய்திகள்

வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட சமுர்த்தி பயனாளிகள்! பழைய படி முத்திரை வழங்க வேண்டும்

சமுர்த்தி பயனாளிகள் இன்று காலை முதல் வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச செயலகத்தை மறித்து மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 30 கிராம மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவர் மயங்கி விழுந்ததால் அங்கு பதற்றமான நிலை தோன்றியுள்ளது.

இதில் கலந்து கொண்டுள்ள மக்கள், பழைய முத்திரை பட்டியல் வழங்கப்பட வேண்டும் மற்றும் சமுர்த்தி முத்திரை எல்லோருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களை கடமைக்கு செல்லவிடாது இடைநிறுத்தி வைத்துள்ளனர்.

இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலை ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சற்று முன் பொலிஸ் உயரதிகாரிகள் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களை கடமைக்கு செல்லவிடுமாறு கோரிய போதிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அதனை மறுத்துள்ளனர்.

மேலும், தமது கோரிக்கைகளை முன்வைத்து பெருந்திரளான மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றதுடன், பொலிஸாரும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

தென் கொரியாவில் மீன்பிடித் துறையில் வேலை வாய்ப்பு 26 ஆம் திகதி வரை

wpengine

தெய்வீக பிணைப்பை எடுத்துகாட்டும் ஹஜ் பெருநாள் ஜனாதிபதி

wpengine

மன்னாரில்,வவுனியாவில் நித மோசடி

wpengine