பிரதான செய்திகள்

வறிய மக்களுக்கு வழங்கிய நிவாரணத்தில் மோசடி

வறிய குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க நன்கொடையாளர்கள் வழங்கிய உலர் உணவு தொகையை வெலிகமை பிரதேச சபையின் தலைவர் தனது வாகனத்தை பயன்படுத்தி மக்களுக்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெலிகமை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரிடம் மக்களுக்கு வழங்குவதற்காக 5 கிலோ அரிசி, கிழங்கு, பருப்பு, வெங்காயம் உட்பட உலர் உணவுப் பொருட்களை விற்பனை செய்துள்ளார்.


தனியார் நிறுவனம் ஒன்று அமைச்சர் டளஸ் அழகப்பெருமவிடம் இந்த உலர் உணவுப் பொருட்களை கையளித்துள்ளது. அமைச்சர் உள்ளூராட்சி சபைகளுக்கு அவற்றை பகிர்ந்தளித்துள்ளார்.


இவ்வாறு கிடைத்த உணவுப் பொருட்களை உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் தாம் விரும்பியவாறு விநியோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


நாடு முழுவதும் அன்றாட வருமானத்தை பெற்று வந்த வறிய மக்கள் தற்போது பெரும் பொருளாதார கஷ்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த மக்களுக்கு வழங்குவதற்காக குறித்த நிறுவனம் உலர் உணவுப் பொருட்களை வழங்கியிருந்தது.

Related posts

மெல்ல மறையும் அஷ்ரப் நாமம்..!

wpengine

டெபாசீட் பணத்தைக்கூட இழந்துதவிக்கும் சீமான்

wpengine

100 வயதினை தாண்டியோருக்கு 5000ரூபா

wpengine