பிரதான செய்திகள்

வர்த்தகமானி அறிவித்தல் வெளிவந்தால் 19ஆம் திகதி தேர்தல் மஹிந்த

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் செவ்வாய் கிழமை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படுமாயின் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறும் தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டத்தில் வேட்புமனுக்களை வெளியிடும் தினம் குறித்து தீர்மானிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பைசர் முஸ்தபாவை இன்று தேர்தல் ஆணைக்குழுவில் சந்தித்த போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டு அதனை உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சருக்கு அனுப்பியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்பதே தனது நோக்கம் எனவும் அதற்காக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மாகாண சபை ஒன்றுக்கு உள்ளடக்க வேண்டிய ஆளுகைக்குரிய பகுதி, தொகுதி அடிப்படையிலும் பொதுப்பட்டியலிலும் தெரிவுசெய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அடங்கிய பரிந்துரைகளை, அமைச்சர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் கையளித்துள்ளார்.

Related posts

தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பதவி ஆசைக்காக கொலை செய்ய தயங்க மாட்டார்கள்.

wpengine

இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 400 வாகனங்களை விடுவிக்க முடியாத நிலை .

Maash

வன்னி மக்களுடன் நான் இருப்பேன் அதில் எதுவித மாற்றமும் இல்லை

wpengine