பிரதான செய்திகள்

வரிகளில் சீர்திருத்தங்ளை செய்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன.

இடைக்கால அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் பல நடவடிக்களை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய வற் வரியை 15 வீதத்திலிருந்து 8 வீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தொலைத்தொடர்பு வரியை 25 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.

பொருளாதார புத்துயிரூட்டல் என்ற தொனிப்பொருளில் உடனடியாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

அதற்காக வரிகளில் சீர்திருத்தங்ளை செய்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன.

Related posts

மக்கள் உள்ளாடைகளை அணியாமல் தியாகம் செய்ய வேண்டும் – கொள்கைக்கு ஆதரவளிக்க வேண்டும்

wpengine

வவுனியாவில் இரு மாணவர்கள் முதலாமிடம்

wpengine

முஸ்லிம் அரசியலின் இயலாமை! பிரதம அதிதியாக ஹஸன் அலி,பஷீர் சேகுதாவூத்

wpengine