பிரதான செய்திகள்

வரவு செலவுத் திட்டத்தினூடாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய உர மானியம் இன்று முதல் அமுல்

வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய உர மானியத் திட்டத்தை இன்று முதல் அமுல்ப்படுத்தவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் உரத்திற்கு பதிலாக விவசாயிகளுக்கு எவ்வித பணமும் செலுத்த வேண்டிய தேவையில்லை என நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

50 கிலோகிராம் உர மூடையொன்றின் சந்தை விலை 2500 ரூபாவாக காணப்படுகின்றது.

இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்திற்கு அமைய விவசாயிகளுக்கு 350 ரூபா மானிய அடிப்படையில் உர மூடையொன்று வழங்கப்பட்டது.

புதிய திட்டத்தின் அடிப்படையில் குறைந்த விலைக்கு உரம் வழங்குவதை விடுத்து உரம் கொள்வனவு செய்ய பணம் வழங்கப்படவுள்ளது.

அத்துடன் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வரையில் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

விவாசயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னர் ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

விவசாயிகள் மீது பொருளாதாரச் சுமையை சுமத்துவதற்கு அரசாங்கம் ஒரு போதும் நடவடிக்கை எடுக்காது என ஜனாதிபதி இதன் போது கூறியுள்ளார்.

Related posts

ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்காக சி.ஐ.டியினர் சற்றுமுன் அவரது இல்லத்தை சுற்றிவளைத்துள்ளனர்.

wpengine

பலஸ்தீன உரிமைக்காக ஆதரவளிப்போம்

wpengine

நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள், சட்ட சபைகள் போன்றவற்றை மறுசீரமைக்க வேண்டும்

wpengine