வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் “சும்மா காதில பூ சுத்த வேணாம்”

(ஜான்சிராணி சலீம்.)


அச்சகத்தால் அரை வயிறும் நிரம்பாத நிலையில் மச்சக்கார அதிஷ்டம் தங்களுக்கு அடித்தது. தங்களுக்கு அதிஷ்டமாக அமைந்தாலும். தமிழ் மக்களுக்கு துரதிஷ்டமே.
நேற்று முன் தினம் (02.12.2020) பாராளுமன்றில்.
அ.இ.ம.கா.தலைவர் ரிஷாட் பதியுதீனைப் பற்றிய தங்களின் அபாண்டங்களும். அப்பட்டமான பொய்களுக்குமான வாசிப்பு மிக அருமையாக இருந்தது.


தமிழ் மக்களின் காவலன் போல் பாசாங்கு செய்து காகிதத்தை வாசிப்பதினால் உங்களால் தியாகி திலீபனாகிவிட முடியாது.


குலசிங்கம் திலீபன் அவர்களே.!
நாகரீகம், பண்பாடு, பழக்க வழக்கம். பணிவு, அடக்கம். இன்னோரன்ன நல்ல விடயங்களை உங்கள் தலைவர் மதிப்பிற்குரிய டக்ளஸ் தேவானாந்த அவர்களிடமே முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.


ரிஷாட் பதியுதீனின் பெயரை உச்சரித்தே அறுதி பெரும்பான்மையை பெற்ற மொட்டுக் கட்சிக்கு முட்டுக் கொடுக்கும் நீங்களும் அவரின் பெயரை அசைபோட்டே அரசியலில் முன்னேறலாம் என கனவு காணதீர்கள். அந்தளவிற்கு தமிழ் மக்கள் முட்டாள்கள் அல்ல.


முன்னாள் அமைச்சர் ரிஷாட் தமிழ் மக்களுக்கு தவறு செய்துயிருந்தால் ஆதாரத்துடன் நிரூபியுங்கள். எமது நாட்டின் நீதிதேவதை கண்களுக்கு கறுப்புத் துணி கட்டாது பார்த்துக் கொண்டுயிருக்கின்றார்.


சும்மா காதில பூ சுத்த வேணாம்.
ரிஷாட் எனும் இமயம் 20 வருட அரசியல் அனுபவம்.அவரின் சேவைகளும், இன. மத.பேதங்களுக்கு அப்பால் அளப்பெரியது. இமயம் எத்தனை சோதனைகள் வந்தாலும் தாங்கிக் கொள்ளுமே தவிர ஒரு நாளும் தளம்பாது. தாழிறங்கவும் மாட்டாது.


கண்கெட்ட அரசும். கண்டுகொள்ளாத நீதியும்.முஸ்லிம் தலைமைகள் மீதும். சமூகத்தின் மீதும் நெருக்கடிகளை ஏற்படுத்தி அவர்களின் இருப்புக்களை கேள்விக்குறியாக்கியுள்ள இவ்வேளையில் சக சகோதர இனத்தைச் சேர்ந்த தங்களின் தான் தோன்றித்தனமான இக்கருத்துக்கள் கண்டிக்கபட வேண்டியதொன்றாகும்..
தமிழ் முஸ்லிம் உறவு என்பது வீட்டுத் தோட்டத்தைப் போன்றது. அதற்குள் உட்புகுந்து தோட்டத்தை நாசம் செய்யும் விலங்குகளைப் போன்று இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தி அதன் மூலம் தென்னிலங்கையை குஷிப்படுத்த வேண்டாம் என மிகவும் வினயமாக வேண்டிக் கொள்கின்றேன்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares