பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வன்னி மாவட்ட அரசியல்வாதிகளின் கவனத்திற்கு!!! வவுனியாவில் போராட்டம்

வவுனியா கலாபோகஸ்வேவ கிராமத்திற்கான பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரி ஏ9 வீதியை மறித்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா சிங்கள பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இக் கிராமத்திற்கான பிரதான வீதி நீண்ட காலமாக திருத்தம் செய்யப்படாமல் உள்ளது.

இதனால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ளவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், ஊர்வலமாக சென்று வீதியை மறித்தும் போக்குவரத்து தடையையும் ஏற்படுத்தினர்.vavuniya_protest_002

மாமடு சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஹொரவப்பொத்தானை வீதி வழியாக ஊர்வலமாக சென்று, வவுனியா மணிக்கூட்டுக் கோபுரப் பகுதி மற்றும் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.vavuniya_protest_003

சுமார் 5 மணி நேரமாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் அசம்பாவிதங்கள் இடம்பெறாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.vavuniya_protest_004

இதேவேளை அவ்விடத்திற்கு வருகை தந்த மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

97.2 வீதமான கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட நிலையில் கிளிநொச்சி . ..! அரச அதிபர் அறிவிப்பு . ..

Maash

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வலுப்படுத்தியுள்ளார்.

wpengine

Update அதிகாலை யானை தாக்குதல் மீண்டும் ஒரு சிறுமி மரணம்

wpengine