வணக்கத்துக்குரிய அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் மரணம்

வணக்கத்துக்குரிய அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரர் காலமானார்.

கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரர் கீழே விழுந்ததன் காரணமாக சுயநினைவு அற்றநிலையில் இன்று கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனளிக்காத  நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்கள்  தெரிவிக்கின்றன.

இதேவேளை கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் கலகம அத்ததஸ்ஸி தேரர் அஸ்கிரி பீடாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

உடுகம சிறி புத்தரக்கித்த தேரர் காலமானதன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அத்ததஸ்ஸி தேரர் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares