பிரதான செய்திகள்

வட மாகாண பொலிஸ் விளையாட்டு போட்டி வவுனியாவில்

வட மாகாண பொலிஸ் விளையாட்டு விழா எதிர்வரும் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கிடையில் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கோடு நடத்தப்படும் இவ் விளையாட்டுப் போட்டியில் வட மாகாணத்தில் உள்ள 6 பொலிஸ் டிவிசனை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன் இப்போட்டிகள் பொலிஸ் மா அதிபரின் வழிநடத்தலில் வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

17 ஆம் திகதி மற்றும் 19 ஆம் திகதியில் இடம்பெறவுள்ள இவ் விளையாட்டு விழா வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்ணான்டோ தலைமையில் இடம்பெறவுள்ளதுடன் இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் வட மாகாணத்தை சேர்ந்த உயர் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந் நிலையில் 19 ஆம் திகதி 6 பொலிஸ் டிவிசனைச்சேர்ந்த பொலிஸாரின் அணிவகுப்பும் நகரசபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Related posts

சஜித்தின் தோல்விக்கு காரணம் இதுதான் தெரிந்துகொள்ளுங்கள்

wpengine

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கைது! உண்மை நிலை இது தான்

wpengine

அறைக்கு சண்டை போட்ட அமைச்சர் ஹபீர் ,லக்ஸ்மன்

wpengine