பிரதான செய்திகள்

வட மாகாண சமஷ்டி யோசனை சுவிஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது சிங்கள பத்திரிக்கை

வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட சமஷ்டி முறைமை தொடர்பான யோசனை சுவிட்சர்லாந்திலுள்ள “ப்ரிபுக் பெட்ரல்” எனும் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

கொழும்பிலுள்ள சுவிஸ் தூதுவர் காரியாலய அரசியல் பிரிவு அதிகாரியொருவரின் உதவியுடன் இந்த நிறுவனத்தின் அரசியல் நிபுணர்கள் இருவரினால் இந்த பிரேரணை வட மாகாண சபைக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனின் அழைப்பையேற்று சுவிஸ் குழு யாழ். சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

வெளிநாட்டுத் தூதுவர்களுக்கான வியானா உடன்படிக்கையையும் மீறி கொழும்பு சுவிஸ் தூதுவர் காரியாலயத்திலிருந்து அரசியல் நடவடிக்கைக்கு பொறுப்பான அதிகாரி சமஷ்டி விசேட நிபுணர்கள் குழுவை நாட்டுக்குள் அழைத்து வந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கை இணைத்தல் உள்ளிட்டதாக  நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சமஷ்டி முறைமை யோசனைக்கு மேற்கு நாடுகளின் தூதுவர் காரியாலயங்களின் உதவியை பெறவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளதாகவும் இன்றைய தேசிய சிங்கள நாளிதழொன்று குறிப்பிட்டுள்ளது.

Related posts

வேட்பாளர்களும் பேஸ்புக் தொலைக்காடசிகளும்

wpengine

வலய கல்விப்பணிப்பாளருக்கு எதிராக ஆசிரியர் ஒருவர் உண்ணாவிரதம்.

wpengine

வவுனியா மக்களுக்கு பொது எச்சரிக்கை! டெங்கு கவனம்

wpengine