பிரதான செய்திகள்

வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மியின் உருவ பொம்பை ஊர்வலம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினுக்கு எதிராக யாழ்.மாவட்ட முஸ்லிம்கள் இன்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை இந்துக்கல்லூரியில் அண்மையில் எழுந்த அபாயா ஆடை விவகாரத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பினரின் நிலைப்பாட்டை ஆதரித்து வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக யாழ். மாவட்ட முஸ்லிம்கள் இன்றைய தினம் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய தினம் யாழ். நாவாந்துறை நான்கு சந்தியிலுள்ள ஜூம்மா பள்ளி வாசலில் இடம்பெற்ற மதிய நேர ஜூம்மா தொழுகையின் பின்னர் பள்ளிவாசலுக்கு முன்பாக ஒன்றுகூடிய இவர்கள் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டனர்.

இவ்விடயத்தில் தனது சொந்த மதத்தினை மதிக்காமல் அஸ்மின் அவர்கள் தெரிவித்துவரும் கருத்துக்களை அவர் நிறுத்திக்கொள்வதுடன் இதற்காக அவர் பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அத்துடன் அயூப் அஸ்மினுடைய உருவ பொம்மையினையும் ஊர்வலமாக இவர்கள் எடுத்துச்சென்றதுடன் நான்கு சந்தி பகுதியில் அதனை தீயிட்டு கொழுத்தி எதிர்ப்பை வெளியிட்டனர்.

 

Related posts

இலக்கை அடைய உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம். ஐ.நா உலக வர்த்தக மாநாட்டில் றிசாத் உரை

wpengine

248 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்புமனு நிறைவு

wpengine

அத்தியாவசியப் பொருட்களுக்கு வெற் வரி கிடையாது- அமைச்சர் றிஷாத் பாராளுமன்றத்தில் அறிவிப்பு

wpengine