பிரதான செய்திகள்

வட மாகாண சபை உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு! பயிற்சி வழங்கி பிரயோசனமில்லை

வடக்கு மாகாணசபையின் நிர்வாக ரீதியிலான செயற்பாடுகளை அதிகாரிகள் முறையாக முன்னெடுக்கப்படுவதில்லையென பெயர் குறிப்பிட விரும்பாத மாகாண சபை உறுப்பினர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மாகாணசபையின் நிர்வாக ரீதியான செயற்பாடுகளுக்கென அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சிகளை பெற்றுக்கொள்கின்றபோதும், நிர்வாக ரீதியான செயற்பாடுகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லையென குறிப்பிட்டார்.

அத்துடன், நிர்வாக பயிற்சி முகாம்கள் வெளிநாடுகளிலோ உள்நாடுகிலோ நடத்தப்பட்டாலும், அந்த நிர்வாக பயிற்சி முகாம்களில் அதனுடன் தொடர்புபடாதவர்கள் பயிற்சிகள் பெற்றுக்கொள்வது போன்ற செயற்பாடுகள் இடம்பெறுவதாக மாகாணசபை உறுப்பினர் குறிப்பிட்டார்.

அத்துடன், ஆசிய நிதியத்தினால் மாகாண சபை உறுப்பினர்களுக்காக இந்தியாவில் ஏற்பாடு செய்துள்ள பயிற்சி முகாமிலும் இவ்வாறான நிலையே ஏற்பட்டுள்ளதாகவும் மாகாணசபை உறுப்பினர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் மாகாணசபை உறுப்பினரான எம்.கே சிவாஜிலிங்கம் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

Related posts

அமைச்சர் ஒருவரினால் சர்ச்சை! மக்கள் பாதிப்பு

wpengine

இத்தாலி நகரமொன்றில் வீடற்றவர்களுக்கு உதவினால் அபராதம்!

wpengine

சமூக ஊடகங்கள் குறித்து கவலை தெரிவித்த அமைச்சர்

wpengine