பிரதான செய்திகள்

வட மாகாண சபையின் புதிய உறுப்பினர் இ.ஜெயசேகரம்

வட மாகாணசபையின் புதிய உறுப்பினராக தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ்.வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

மாணிப்பாயில் உள்ள யாழ்.வணிகர் கழகத்தின் அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு இவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

சிரேஸ்ட சட்டத்தரணியும், சமாதான நீதவானுமாகிய V.T.சிவலிங்கத்தின் முன்னிலையில் இன்று இ.ஜெயசேகரம் சத்தியப்பிரமானம் செய்துகொண்டுள்ளார்.

மாகாணசபையின் அங்கத்துவக் கட்சிகளுக்கான சுழற்சிமுறை ஆசனம் இம்முறை தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்படுகின்றது.

முதலில் இருந்த ரெலோ அமைப்பைச் சேர்ந்த மயூரனின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையிலேயே இ.ஜெயசேகரம் இன்று வட மாகாணசபையின் புதிய உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளார்.

குறித்த நிகழ்விற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடமாகாண சபை உறுப்பினர்களான கேசவன் சயந்தன், அ.பரஞ்சோதி ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்குவந்தால் புதிய அரசமைப்பை உருவாக்குவோம்

wpengine

அமைச்சு பதவி் தொடர்பில்! யாரு தலையீட வேண்டாம் -முத்து சிவலிங்கம்

wpengine

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராறிஸ்கான் நியமனம்

wpengine