பிரதான செய்திகள்

வட மாகாணத்தில் இன்று மின்தடை

வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியாவின் சில பகுதிகளில் இன்று மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக மின்சாரம் தடைசெய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை யாழ்ப்பாணத்தின் மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, கொடுக்குளாய், ஆழியவளை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, கேவில், வெற்றிலைக்கேணி இராணுவ முகாம், கட்டைக்காடு இராணுவ முகாம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென கூறப்படுகின்றது.

இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கிளிநொச்சி மாவட்டத்தின் நாகபடுவான், பல்லவராயன் கட்டு ஒரு பகுதி, சோலை, ஜெயபுரம் ஆகிய பகுதிகளிலும், இன்று காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வவுனியா மாவட்டத்தின் தவசிக்குளம் கிராமம், அட்டம்பஸ்கட கிராமம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முஸ்லிம் சமூகத்திற்கான ஒரே ஒரு ஊடகமாக இருந்த UTV இற்கு நடந்தது என்ன? பசிலுக்கு விற்கப்பட்டதா ? UTV இழுத்து மூடப்பட்டதா?

wpengine

சமுர்த்தி பயனாளர்களை தொழில்முனைவோராக மேம்படுத்துங்கள் பிரதமர் ராஜபக்ஷ

wpengine

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்க நடவடிக்கை!

Editor