வட்ஸ் அப் (WhatApp) நிறுவனத்திற்கு இன்று பிறந்த நாள்

வட்ஸ் அப் (Whats App) நிறுவனம், ஜான் கோம் என்பவரால் 2009 ஆம் ஆண்டு அதாவது இன்றைய நாளைப்போன்றதொரு தினத்திலேயே (24.02.2020) கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.


வட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் இன்க் நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டொலர் விலை கொடுத்து கையகப்படுத்தினர்.


வட்ஸ் அப் (ஆங்கிலம்: WhatsApp) என்பது நுண்ணறி அலைபேசிகளில் இயங்கும் உடைமை உரிமையுள்ள (proprietary) ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும்.
தமிழில் ” பகிரி” அல்லது புலனம் அல்லது கட்செவி அஞ்சல் ” என்றும் அழைக்கப்படுகிறது.


அன்ட்ரொய்ட், ஆப்பிள், விண்டோஸ் மொபைல், நொக்கியாவின் சிம்பியன், பிளாக்பெரி போன்ற பல்வேறு அலைபேசி இயங்குதளங்களிலும் இயங்கும்.


2009 ஆம் ஆண்டு பிரையன் ஆக்டன் (Brian Acton), ஜான் கோம் (Jan Koum) ஆகியோரால் நிறுவப்பட்ட வட்ஸ்ஆப் நிறுவனத்தால் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது.


இவர்கள் இருவரும் யாஹூ நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது.


இதன் மூலம் பயனர்களுக்கு உரைச் செய்திகளையும் குரல் செய்திகளையும் அனுப்பவும், குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும் மற்றும் படங்கள், ஆவணங்கள், பயனர் இருப்பிடங்கள், மற்றும் பிற ஊடகங்களுக்கு மூலம் பகிர்ந்துகொள்ளலாம்.


2015 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தின்போது, இதை 900 மில்லியன் (90 கோடி) மக்கள் பயன்பாட்டுடன் உலகின் மிகவும் பிரபலமான செய்தியிடல் பயன்பாடாக மாறியது.


பெப்ரவரி 2020 நிலவரப்படி உலகளவில் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 412 total views,  3 views today

Comments

comments

Shares