வட்ஸ்அப் பாவிப்போர் கட்டாயம் பாருங்கள் உங்கள் அந்தரங்கம் திருடப்படலாம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பல அசாதாரண பிழைகள் மற்றும் ஹேக்கர்களின் தாக்குதல் இலக்காக வட்ஸ்அப் உள்ளது. 

சில ஹேக்கர்கள் தகவல்களைத் திருட முயல்கின்றனர், வித்தியாசமான பிழைகள் மூலம் பயன்பாட்டைச் செயலிழக்கச் செய்கின்றனர். 

இந்த வரிசையில் வட்ஸ்அப்பை செயலிழக்கச் செய்யும் டெக்ஸ்ட் பாம் என்ற பிழை தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த பிழை ஓகஸ்ட் நடுப்பகுதியில் பிரேசிலில் தோன்றியது. பின்னர் பிரேசிலுக்கு வெளியே அதன் அண்டை நாடுகளுக்குப் பரவியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றது. 

இதில் தொடர்ச்சியான சிறப்பு எழுத்துக்கள் உள்ளன, அவை எதையும் குறிக்கவில்லை, ஆனால் அவை திரையில் காண்பிக்கப்பட்ட உடன் உங்கள் வாட்ஸ்அப் பயன்பாடு செயலிழந்துவிடுகிறது. 

வட்ஸ்அப் இது கிராஷ் செய்ததும், பயனர் வட்ஸ்அப் பயன்பாட்டை மூடிவிட்டு மீண்டும் திறக்க முயற்சிக்கும் போது திறக்க மறுக்கிறது. 

இதற்குத் தற்காலிக தீர்வாக அறியப்படாத எண்களால் அனுப்பப்படும் எந்த செய்திகளையும் திறக்க வேண்டாம் என்று வட்ஸ்அப் தெரிவித்துள்ளது. 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares