வட்டி பிரச்சினை பிரதமர் மஹிந்தவை சந்தித்த மு.கா.ஹரீஸ்

அதிக வட்டி வழங்குவதாகத் தெரிவித்து கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களில் மக்களால் வைப்பிலிடப்பட்ட 2,000 மில்லியன் ரூபா நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குறித்த நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளை தான் மேற்கொண்டுள்ளதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹாரீஸ் தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


இந்த மோசடி விவகாரத்தை தேசியப் பிரச்சினையாக மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கவனத்துக்கும் இதனைக் கொண்டு சென்றுள்ளோம்.


இதன்படி எதிர்வரும் நாடாளுமன்ற சபை அமர்வில் நிலையிற் கட்டளைச் சட்டத்தின் கீழ் இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சஜி் பிரேமதாச பேசவுள்ளார்.


இதேவேளை, நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவை நான் விரைவில் சந்தித்து இந்த விவகாரம் தொடர்பில் அவரது கவனத்துக்குக் கொண்டுவரவுள்ளேன்.


இந்த விவகாரம் தொடர்பில் விசேட பொலிஸ் குழு ஒன்றை நியமித்து அதன்மூலம் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் வேண்டுகோள் விடுக்கவுள்ளேன் என்றும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹாரீஸ் தெரிவித்தார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares