பிரதான செய்திகள்

வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மீனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! மீள்குடியேற்றத்தில் சாயம் பூச வேண்டாம்.

வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் தன்னிச்சையான செயற்பாட்டை கண்டித்து யாழ்ப்பாணத்திலுள்ள முஸ்லீம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 7 வருடங்களாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் எனும் பெயரில் யாழ் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு பாடுபடும் அமைப்பு இந்த போராட்டத்தை மக்களுடன் இணைந்து மேற்கொண்டிருந்தது.

முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் யாழ்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் இன்று யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடாத்தவுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பிலான விஷேட திட்டமிடல் அமர்விற்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.muslem01-600x449

வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் செயற்பாடு பக்கச்சார்பானது எனவும் அவர் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்தை அரசியல் சாயம் பூச முயற்சிப்பதாகவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குற்றம் சுமத்தினர்.muslem02-600x449

Related posts

ரெலோவும் கட்சியும் வெளியேறியது

wpengine

இந்தியா எங்களது இதயத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது டொனால்டு டிரம்ப்

wpengine

அமைச்சு பதவியினை இழக்கும் அமைச்சர்கள்

wpengine