வடமாகாண சபை உறுப்பினர்களை சந்தித்த சம்பந்தன்! முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கலந்து கொள்ளவில்லை

எதிர்க்கட்சித் தலைவரும், தழிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய ஆர். சம்பந்தன் நேற்று மாலை உத்தியபூர்வமாக விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வருகைதந்தார்.

ஆர்.சம்பந்தன், வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் வட மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்று நேற்று மாலை யாழ் கோப்பாய் வீதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

நாடாளுமன்றத்தில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், அதனுடாக தழிழ் மக்களுக்கு எற்படுத்தப்பட இருக்கின்ற நன்மைகள், மீள்குடியேற்றப்பட்டுள்ள மற்றும் மீள்குடியேற்றப்படாத இடங்களில் மக்களுக்கான தேவைகள், நில அளவை மூலம் அத்துமீறி மக்களின் இடங்களை கைப்பற்றல், தற்போதைய எற்பட்டுள்ள ஆட்சி மாற்றங்களினால் தழிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் இங்கு விரிவாக வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் அமைச்சர் கள், உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவருடன் கலந்துரையாடியுள்ளனர். 205937812Sambantha (2)

இந்த கலந்துரையாடலில் வடமாகாண சபையின் 22 உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிலையில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன், விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் கல்வியமைச்சர் குருகுலராஜா ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.Untitled

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares