பிரதான செய்திகள்

வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரனுக்கு அழைப்பு விடுத்த கட்சி

எதிர்வரும் 19.08.2017 சனிக்கிழமை காலை 11 மணிக்கு வவுனியாவில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) வின் தலைமைக் காரியாலயத்தில் அக்கட்சியின் உயர்மட்டக்குழு கூடவுள்ளதாகவும், அக்கூட்டத்திற்கு சமுகமளிக்குமாறும் அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுக்கு கட்சியின் செயற்ப்பாட்டு செயலாளர் விசேட அழைப்பினை விடுத்துள்ளார்.

வடமாகாண அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவே இவ்விசேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது, கடந்த 12ம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் நேற்றைய தினம் (14) அமைச்சர் அவர்கள் தனது நிலைப்பாடு தொடர்பாக தெளிவான விளக்கத்தினை கட்சியின் தலைவர் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு தெரிவித்ததன் பின்னர் ஊடக சந்திப்பினூடாக ஊடகங்களுக்கும் வெளியிட்டிருந்தார்,

அதில் கடந்த 12ம் திகதி கூட்டத்தில் தான் வெளிப்படுத்தியிருந்த அதே நிலைப்படிலேயே தற்பொழுதும் இருப்பதாகவும் அதிலிருந்து துளியேனும் மாறப்போவதில்லை என தெளிவாக கட்சியின் தலைவருக்கும், ஊடகங்களுக்கும் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது, இச்சந்தற்பதிலேயே அமைச்சருக்கு உயர்மட்டக்குழு கூட்டத்திற்கான விசேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

11 மில்லியன் ரூபாய் செலவில் 11 கிராமிய வீதிகள் கொங்கிரீட் வீதிகளாக அபிவிருத்தி

wpengine

80 வீத நிதியை திறைசேரிக்குத் திருப்பி அனுப்புகிறார் விக்னேஸ்வரன்

wpengine

நியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்! ஞாபகார்த்த சேவை

wpengine