பிரதான செய்திகள்

வடமாகாண அமைச்சர்களுக்கான விசாரணை! ஆளுநர் கோரிக்கை

வட மாகாண அமைச்சர்களுக்கு எதிரான விசாரணைக்குழு தொடர்பில் அச் சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தினை அனுப்பி வைக்குமாறு ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில், விசாரணையை மேற்கொள்வதற்காக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்டுள்ள ஒய்வு பெற்ற நீதியரசர் தலைமையிலான குழுவிற்கான அனுமதியினை வழங்குமாறும், இதற்கான நிதி அனுமதியும் ஆளுநரிடம் கோரப்பட்டிருக்கின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வட மாகாண சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தினையும் அங்கு மேற்கொள்ள வேண்டியுள்ள விசாரணைகளின் விபரங்களையும் அனுப்பிவைக்குமாறு ஆளுநர் ரெஜினோலட் குரே பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொழும்பு அரசியலில் பரபரப்பு அடங்கவில்லை.

wpengine

மன்னாரில் வெண்பா பணி மூட்டம்! பலருக்கு அசௌகரியம்

wpengine

ஜனவரி 12 முதல் போலீஸ் சுற்றிவளைப்பில் இதுவரை சிக்கிய 30,000 அதிகமானோர்கள்.

Maash