பிரதான செய்திகள்

வடமராட்சி கிழக்கு பகுதியில் ஆயுதம் மீட்பு! இது எந்த தீவிரவாதிகளின் வேளை?

வடமராட்சி கிழக்கு – அம்பன் பகுதியில் வீடு கட்டுவதற்கு தோண்டிய அத்திவார குழிக்குள் இருந்து நேற்று சனிக்கிழமை மாலை பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பன் பகுதியில் வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக பொதுமகன் ஒருவா் அத்திவாரம் தோண்டியுள்ளார்.

இதன்போது அத்திவார குழிக்குள் இருந்து ஒரு பிளாஸ்டிக் பரல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பிளாஸ்டிக் பரலை சோதித்தபோது அதற்குள் பெருமளவு வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடா்ந்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பிளாஸ்டிக் பரலுக்குள் இருந்து பெருமளவு வெடிபொருட்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனா்.

Related posts

சிலாவத்துறை மீனவர்களின் கோரிக்கையைத் தீர்த்து வைக்க அமைச்சர் அமரவீர தலைமையில் மீண்டும் கொழும்பில் கூட்டம்

wpengine

வங்காள விரிகுடாவில் தாழ்முக்கம்! வடக்கு,கிழக்கு மோசமான நிலை

wpengine

இணைப்புச் செயலாளராக முன்னால் உறுப்பினர் அன்வர் நியமனம்

wpengine