வடபகுதி பாடசாலைகளை 12 மணியுடன் மூட வேண்டும் என மாவை கோரிக்கை

வடபகுதிப் பாடசாலைகளை நண்பகல் 12 மணியுடன் குறிப்பிட்ட காலம் வரைக்கும் பூட்டி மாணவர்களைப் பாதுகாக்க பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசாவிடம் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். 

 

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பூமி வெப்பமடைந்து வெப்பம் வெளிப்பட்டு வருவதாலும் இலங்கைப் பிராந்தியத்தில் சூரிய வெப்பத்தின் தாக்கம் உச்சநிலையையடைந்திருப்பதாலும் அதன் பாதிப்புக்களிலிருந்து பாடசாலை மாணவர்கள், ஆரம்பப் பாடசாலை சிறுவர்களைப் பாதுகாக்கவேண்டிய கடப்பாடும் பொறுப்பும் எமக்கு உண்டு.

வடக்கு கிழக்கில் பல பாடசாலைகள் நண்பகல் 12 மணியுடன் மூடப்படுகின்றன. ஏனெனில் 12 மணிக்குப் பின் நிலவெப்பமும் அதிகரிக்கும் என்பதால் சூரிய வெப்பத்தாக்குதலில் எதிர்விளைவுகள் சிறுபிள்ளைகளைப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவேண்டும் எனும் எண்ணமேயாகும்.

எனவே வடபகுதிப் பாடசாலைகளையும் நண்பகல் 12 மணியுடன் ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் மூடி மாணவர்களைப் பாதுகாக்க பொருத்தமான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares