பிரதான செய்திகள்

வடக்கு முஸ்லிம்களின் அடிப்படை தேவைகளை பெற்றுக்கொடுக்க செயற்படுவோம்! மாவை

வடக்கில் இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் மக்களின் அடிப்படை தேவைகள்  மற்றும்  வீடமைப்பு வசதிகளை பெற்றுக் கொடுக்க தாம் முன்னின்று செயற்படவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சோ.மாவை சேனாதிராஜாதெரிவித்துள்ளார்.

 அதற்காக  காலம் தற்போதைய  உருவாகியுள்ளதாகவும் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டினை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னேடுத்துள்ளதாகவும்  மாவை சேனாதிராஜா  குறிப்பிட்டார்.

 

யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் மக்கள் பணிமனையின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தில்    வீடற்று   இருக்கும் முஸ்லிம் மக்கள் பிரதி நிதிகளுடனான சந்திப்பு நேற்றுமுன் தினம் யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் மக்கள் பணிமனையின்   தலைவர் மௌலவி சுபியான் தலைமையில் நடை பெற்றது.

குறித்த சந்திப்பில்  பிரதம அதிதியாக  கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தாம் தமிழ்,முஸ்லிம் மக்களின் ஒற்றுமையினை காட்டிகாத்து வருகின்றோம் எனத் தெரிவித்த அவர் அதற்காக அனைவரும்  ஒன்றிணைய வேண்டும்  எனவும் கேட்டுக்கொண்டார்.

குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்க  ஈ.சரவணபவன் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதி நிதிகள் பலரும்  ; கலந்து கொண்டுள்ளனர்.

Related posts

பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம் சமூகத்தின் வாக்களிப்பும்

wpengine

அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் கோதுமை மா!

Editor

நீதி மன்ற தடை உத்தரவை கிழித்தெறிந்துவிட்டு! ஆர்ப்பாட்டம் நடாத்திய அம்பிட்டியே சுமனரத்ன தேரர்

wpengine