பிரதான செய்திகள்

வடக்கு மாகாண ஆளுநர் பொனிபஸால் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர் பலரிற்கு நேற்றைய தினம் முதல் அதிரடியாக இடமாற்றங்கள் வடக்கு மாகாண ஆளுநர் பொனிபஸால் வழங்கப்பட்டுள்ளது.


இவ்வாறு வழங்கப்பட்ட இடமாற்றங்களில் தற்போதைய ஆளுநர் செயலக செயலாளர் எஸ்.சத்தியசீலன் கொழும்பு அமைச்சிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.


அவரது இடத்திற்கு தற்போதைய உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரான சரஸ்வதி மோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் ஏற்படும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வெற்றிடத்திற்கு தற்போதைய மகளிர் விவகார அமைச்சின் செயலாளரான வரதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.


மகளிர் விவகார அமைச்சின் செயலாளராக தற்போதைய பேரவைச் செயலக செயலாளரான ரூபினி வரதலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளதோடு பேரவைச் செயலகத்திற்கும் பதில் கடமைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

வடமேற்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்!

Editor

கல்லாறு கடற்கரை பகுதியில் கேரளா கஞ்சாப்பொதிகளை கைப்பற்றிய மன்னார் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர்

wpengine

பயங்கரவாத அச்சுறுத்தலும் இயல்பாகவே உள்ளடங்கியுள்ளது! பாதுகாப்பு அமைச்சு

wpengine