வடக்கு மாகாணத்திற்கு சிங்கள ஆளுநரை ஏற்கமுடியாது.

வடக்கு மாகானத்திற்கு புதிய ஆளுநர்  ஒருவரை நியமிக்கப்பட உள்ளதாகவும்  அவர் இராணுவ பிண்ணனியை உடையவர் என்றும் செய்தி வெளியாகியுள்ள நிலையில் அவ்வாறு இராணுவப் பிண்ணனி உடைய ஒருவரை வடக்குமாகான ஆளுநராக ஏற்கமுடியாது என்று வைத்தியகாலநிதி சிவமோகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

ஏற்கனவே நாடுமுழுவதும் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது  கொரோனாவை விட அந்த அச்சம் மக்களை துன்புறுத்துகிறது ஆனால் கொரோனா வைரஸ்  இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக பொறுத்துக் கொண்டுள்ளார்கள்

இந்த நிலையில்  வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் ஆளுநருக்கு பதிலாக புதியவர் ஒருவர் நியமிக்கப்பட உள்ள தாக தெரிய வருகிறது அதுவும் இராணுப்பிண்ணனி  உடையவர் என்று அறிய முடிகிறது  அதை ஏற்க முடியாது

இந்த அரசு தமிழ் மக்களை ஒரு அச்ச சூழலுக்குள் வைத்திருக்கவே நினைக்கிறது  அப்படியான எண்ணத்தை உடனடியாக மாற்ற வேண்டும் தமிழரான சிவில் அதிகாரிகளையே வடக்கு மாகான ஆளுநராக அரசு நியமிக்க வேண்டும் தமிழர்களை ஓரங்கட்ட பழிவாங்கும் பேரினவாத சிந்தனையிலிருந்து அரசு விடுபட வேண்டும் அல்லது இந்த அரசின் அராஜகத் தன்மைகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares