வடக்கு பிரேரணைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

தமிழ் மொழி பேசும் மக்களுக்கு வடக்கில் வேறாக மாநிலம் கோரி வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் சிங்கள பிரதியொன்றை பெற்றுத்தருமாறு கோரி நேற்று உயர்
நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


சட்டத்தரணியொருவரால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுவின் பிரதிவாதிகளாக வட
மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் ,தலைவர் சி.வி.கே.சிவஞானம் , பாராளுமன்ற உறுப்பினர் மாவே சேனாதிராஜா உள்ளிட்ட நான்கு பேரின் பெயர்கள்
குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் அரசு கட்சி ஆகியவை இலங்கையினுள் தனித்து
அரசாங்கமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதா என விசாரணை நடத்தப்பட வேண்டும் என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares