பிரதான செய்திகள்

வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக ரொஷான்

வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக ரொஷான் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

ரொஷான் பெர்னாண்டோ கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் நேற்று வடக்கு மாகாண ஆளுநர் ரொஜினோல்ட் குரேவை அவரது அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.

ரொஷான் பெர்னாண்டோவுடன் ஆளுநர் கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன் வடக்கில் நடக்கும் குற்றச் செயல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார்.

மேலும் போக்குவரத்துகளில் நடக்கும் தவறுகளை சீர்செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Related posts

அரச ஊழியர் சம்பள அதிகரிப்பு…

Maash

வடபகுதி பாடசாலைகளை 12 மணியுடன் மூட வேண்டும் என மாவை கோரிக்கை

wpengine

போதையில் தேவாலயத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் NPP கட்சியின் தீவக அமைப்பாளர் உள்ளிட்ட 8 பேர் கைது.

Maash