வடக்கு கிழக்கு இணைப்பு வியடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மூக்கை நுழைப்பது ஆரோக்கியமான செயல் அல்ல

வடக்கு கிழக்கு இணைப்பு வியடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மூக்கை நுழைப்பது ஆரோக்கியமான செயல் அல்ல அது மட்டும் அல்ல காலாவதியான தனியலகு கோரிக்கையும்  புதைக்கப் படவேண்டும் . மேலும் மூவின மக்களும் வாழும் கிழக்கு தற்போது நிம்மதியாக உள்ளது .என்றாலும் சில விசமிகளால் சில வகையான  இனத் துவேசமும் உள்ளது இவைகள் பேச்சு வார்த்தைகள் மூலம் வெகு சுலபமாக தீர்த்து வைக்கப் படலாம் .

 மேலும் அபிப்பிராய வாக்கு எடுப்பது எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றிய கதைதான் . சாதாரணமாக கிழக்கு தமிழ் மக்கள் வடக்கு தமிழ் மக்களுடன் இணைவது சாத்தியம் அன்று .இது அன்று தொட்டு இன்றுவரை உள்ள நடை முறைச் சிக்கல் .வடக்கு தமிழ் மக்கள் கிழக்கு தமிழ் மக்களை இரண்டாம் தர முறையில் அவர்களை நடத்துவதுதான் . இம் பழக்க வழக்கம் நாடு கடந்த தமிழ் மக்களிடமும் புழக்கத்திலும் உண்டு,அதாவது யாழ்பானத்தான் ,மட்டக்களப்பான் என்றுதான் புழங்குவர் .இதை புலிகள் கூட தங்கள் நடை முறைக் கொள்கையில் கடைப் பிடித்து கருணா முரளிதரனை இழந்தனர் .

கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் வட கிழக்கு இணைப்பு பற்றி பயப் பட வேண்டிய அவசியம் ஓன்று  இல்லை,ஏன் எனனில் அரசாங்கமும் ,மற்றும் மாவட்டம்களிலும் வாழும் மூவின மக்களும் இதற்க்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள் .

குட்டையைக் குழப்ப  வேண்டாம் வடக்கும் கிழக்கும் இணைவது பகல்  கனவு .
இதை போக்காக வைத்து எதிர் வரும் பிரதேச சபைத் தேர்தல்களுக்கு காய் நகர்த்தும் இந்த தந்திரத்தை மக்கள் புரிந்து கொன்டால் சரிதான்

 வட கிழக்கு இணைப்புக்கும்  முஸ்லிம் காகிரஸ் தலைமைக்கும்  எந்த வித அதிகாரமும் இல்லை  இவ்வாறு வாடா கிழக்கு இணைப்பு பற்றி தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா தனது திடமான நம்பிக்கையத் தெரிவித்தார்

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares