பிரதான செய்திகள்

வடக்கு ,கிழக்கில் 65,000 வீடுகள்! யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் இந்து மத விவகார அமைச்சினால் 65,000 வீடுகளை வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிர்மானிப்பதற்கான அங்குராப்பண நிகழ்வு இன்று கோப்பாய் பிரதேச செயலகத்தின் செல்வபுர கிராமத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ் வீட்டுத் திட்டங்களை பார்வையிட்டார். 1673606049House (2)

இவ்வீட்டுத் திட்டங்கள் அவுஸ்ரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பங்களிப்புடன் நிர்மானிக்கப்படவுள்ளன.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்கப்படயிருப்பதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

ஒரு வீட்டின் பெறுமதி 10 லட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்படவுள்ளன.

Related posts

பாணின் விலை அதிகரிப்பிற்கான காரணம் நிதியமைச்சர் ரவி

wpengine

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் நியமனம்

wpengine

அரகலய இழப்பீடு பெற்றவர்கள் சொத்து விபரங்களை நாடாளுமன்றில் வழங்கியுள்ளனரா? விசாரணை ஆரம்பம் .

Maash