வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள்! ஆப்பு வைக்கும் வடக்கு முதலமைச்சர்

வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் வீட்டுத் திட்டத்தை வடமாகாண சபையுடன் கலந்தாலோசித்த பின்னர் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அதுவரையில் அந்த வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைக் கோருகின்ற அவசர பிரேரணையொன்று வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் ​நேற்று வியாழக்கிழமை (24) நடைபெற்ற போதே இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தப் பிரேரணை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடாக நேற்று வியாழக்கிழமை (24) தொலைநகல் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவைத்தலைவர் கூறினார்.

தலா 2.1 மில்லியன் ரூபாய் பெறுமதியில் அமைக்கப்படும் இந்த வீடுகள் வடமாகாணத்துக்கு பொருத்தமில்லாத வீடுகள் என வடமாகாண சபை இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares