வடக்கு கடற்பரப்பில் 124 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றல்; இருவர் கைது

124 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை – மயிலிட்டி துறைமுகத்திற்கு வடக்கு திசையில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

தொண்டமனாறு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிங்கி படகொன்றிலிருந்தே கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படகிலிருந்த சில மூடைகளை கடலுக்குள் வீசிவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச்செல்ல முயன்றுள்ளனர்.

இதன்போது, கடலுக்குள் வீசப்பட்ட கேரள கஞ்சா அடங்கிய 04 பொதிகளை கடற்படையினர் மீட்டுள்ளதுடன், படகிலிருந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares