வடக்கு ஆளுனர் ரேஜிநோல் குரே கொழும்பில் இன்று (31) ஊடக மாநாடு

(அஷ்ரப் ஏ சமத்)
வடக்கில் வாழும் 90 வீதமான தமிழ் மக்கள் அப்பாவியானவா்கள்  அவா்கள் தமது ஜீவனோபாயத்தை மேற்கொண்டு அமைதியாகவே வாழவே விரும்புகின்றாா்கள்.  ஆனால் தெற்கில் இருந்து கொண்டு சில ஊடகங்கள் தவறான செய்திகளைப் பரப்பி மேலும் ஒரு மோதலை ஏற்படுத்தி இன நல்லுரவை கெடுக்க முயற்சிக்கின்றனா்.

நேற்று சாவக்கச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கிகள், மற்றும் வெடி பொருட்கள் போன்று ஏற்கனவே 25 முறை பல்வேறு இடங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது போன்று எதிா்காலத்திலும் கண்டு பிடிக்கப்படும் ஏற்கனவே 3 தசாப்தங்களாக யுத்தம் நடைபெற்ற ஒரு  பிரதேசத்தில் இவ்வாறான பொருட்கள் இருக்கும். . கைவிடப்பட்ட  வெடிகுண்கள் இன்னும் நிலங்களில் பாழ் வீடுகளில் தேங்கி கிடக்கும். என சற்று முன் வடக்கின் முப்படைத் தளபதி தண்னிடம்  தொலைபேசியில் இதனைத் தெரிவித்தாா். இதனை வைத்து சிலா் மீண்டும் வடக்கில்  யுத்தம் ஆரம்பம், என்று தெற்கில்  கட்டுக் கதைகள் சொல்லுகின்றனா்.  என  வடக்கின் ஆளுணா் ரெஜினோல்ட் குரே தெரிவித்தாா்.

SAMSUNG CSC

SAMSUNG CSC

இன்று(31) பத்தரமுல்லையில் உளள் வடக்கு ஆளுணா்  கொழும்பு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டின்போதே வடக்கு ஆளுணா் ரெஜினோல்ட் குரே மேற்கண்டவாறு தெரிவித்தாா்.
அவா் அங்கு மேலும் தெரிவித்தாவது –
தற்போது வடக்கில் வாழம் மக்களுக்கு தேவைப்படுவதெல்லாம்  அமைதியான வாழ்க்கை. படையினா் யுத்த காலத்தில் தமிழ் மக்களது காணிகளை யுத்த நடவடிக்கைக்காக பிடித்தனா். அவைகள் கட்டாயம் அம் மக்களிடம் மீளக் கையளிக்கப்படல்  வேண்டும்.   அதே போன்று விடுதலைப்புலிகள் தமிழ் முஸ்லீம் மக்களது காணிகளை பலவந்தமாக விடுதலைப்புலிகள் குடும்பத்தினருக்கு பகிா்ந்தளித்துள்ளனா். சில காணி நிலங்கள் சொந்தக் காரா்கள் வெளிநாடுகளில் வாழ்வதால் அதனை சிலா் பலவந்தமாக பிடித்து அதில் வாழ்கின்றனா். இடம் பெயா்ந்த சில மக்கள் மீண்டும் இங்கு வராது அவா்கள்வாழும் பிரதேசத்திலேயே வாழ விரும்புகின்றனா். அவா்கள் வாழும் பிரதேசத்தில் காணிகள் வீடுகள் கேட்கின்றனா்.
இதுவரை வடக்கு முதலமைச்சா் எனது நிர்வாகத்தில் எவ்வித பிரச்சினை தலையீடோ  இடம்பெறவில்லை. அவா் நல்ல  நட்புரறவின் மூலம் வடக்கு மாகாணசபை முன்னெடுத்துச் செல்கின்றாா்.
வடக்குக்கு ஒவ்வொரு நாளும் தெற்கில் இருந்து சிங்கள மக்களே அதிகமானோா் உல்லாசம்  வருகின்றனா். அங்கு சகல ஹோட்டல்களில் உள்ள  அரைகளும் நிரம்பிக் காணப்படுகின்றது. யாழ் தேவி புகையிரதத்தில் ஆசனம்  ஒன்றை லேசாக எடுக்க முடியாது. அதிலும்  தெற்கு மக்கள்தான் யாழ் வருகின்றனா். இதனால் யாழ்ப்பாணத்தில் தமிழ் வியாபாரிகள்  சிறுகச் சிறுக வியாபார முன்னேற்றம் காணப்படுகின்றது. இதனையே நாம் இன நல்லுரவுக்கு ஒரு மைக்கல்லாகும்.  அண்மையில் கச்சதீவுக்கு தமிழ் நாட்டில் இருந்து 3500 மக்களும் இலங்கையில் இருந்து 4000ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனா். இவர்களுக்கான உணவு, மற்றும் சகல நீா் பிரயாணம் சகலதையும் இரானுவமும், கடற்படையினருமே மேற்கொண்டனா். அங்கு உரையாற்றிய கிரிஸ்த்துவ பாதிரியாா் அடுத்தமுறையும்  சிங்கள மொழி மூலமும் ஆராதனைகள் நடைபெறும். அதனையும் இந்த கடற்படையினரமே முன் நின்று நடத்த வேண்டும். எனச் சொன்னாா்
அத்துடன் யாழ் நாக தீபம் வரை வெசாக் பக்தி பாடல் தமிழ் மொழியில் பாடுவதற்கும் பாடசாலை மாணவா்களது வெசாக் கூடுகள் அங்கு காட்சிக்கு வைக்கப்படும்.  இதே போல் நத்தாா், தைப்பொங்கள் பைவங்கள் துரையப்பா மைதாணத்தில் நடாத்தப்பட்டது.
நாகதீப விகாரையின் புத்தா் சிலையை  நிர்மாணப் பணியை  யாழ் அரச அதிபா் நிறுத்தியதாக தெற்கில் உள்ள ஊடகம் தெரிவித்துள்ளது, அவ்வாறு நடைபெறவில்லை  அதை நிர்மாணிக்க முன் கடற் பாதுகாப்பு அதிகார சபையிடம் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றே அரச அதிபா் கடிதம் அனுப்பியுள்ளாா். அக்கடிதம் இங்கு தன்னிடம் உள்ளது. என ஆளுணா்  அங்கு ஊடகவியலாளா்களிடம் கடிதத்தை வாசித்து காட்டினாா். ஆனால் புத்தா் சிலை அமைப்பதால் நாக தீப கேவிலின் சிலை மறைக்கப்படும் என வடக்கு பத்திரிகையும் செய்தி வெளியீட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினை வடக்கு மக்கள் முற்றாக ஆதரிக்கின்றனா். அவா் வடக்கு மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளாா். தனியாா் காணிகளில் பௌத்த சிலையோ, கோவிலையே  நிர்மாணிப்பதனை நாங்கள் நிறுத்த முடியாது அவா்களது சொந்தக் காணிகளில் நிர்மாணிக்கின்றனா் அதற்கு அரசு அனுமதி வழங்கத் தேவையில்லை. எனவும் வடமாகாண ஆளுணா் ரேஜிரோல்ட் குரே தெரிவித்தாா்

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares