பிரதான செய்திகள்

“வடக்கில் 22 ஆயிரம் பொருத்து வீடுகள்

வடமாகாணத்தில் 22 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

வடமாகாணத்திலிருந்து 97 ஆயிரம் பொதுமக்கள் பொருத்து வீடுகளுக்கான கோரிக்கையை முன்வைத்து கடிதம் மூலம் தனக்கு அறிவித்தமையை அடுத்தே 22ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் சுவாமிநாதன் வீடொன்றுக்கான செலவீனம் 16 இலட்சம் ரூபாவாக மதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

வடமாகாணத்தில் பொருத்து வீட்டுத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

ராஜாங்க அமைச்சர் அதிருப்தி! தனிப்பட்ட உடமைகளை அங்கிருந்து அகற்றியுள்ளார்.

wpengine

மன்னம்பிட்டிய பஸ் விபத்து நடந்தது என்ன?

Editor

டிப்ளோமா பயிற்சிநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கிய அமைச்சர் றிஷாட்

wpengine