அரசியல்கிளிநொச்சிசெய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வடக்கில் வீடு கட்ட வசதி இல்லாதவர்களுக்கு, வீடுகள் கட்டுவதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும்.

போரினால் வீடுகளை இழந்த மக்களையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். வடக்கில் வீடு கட்ட வசதி இல்லாத ஏராளமானோர் உள்ளனர். “அவர்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டுவதற்கு எங்கள் அரசாங்கம் ஆதரவளிக்கும்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

போரின் போது பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான அனைத்து காணிகளையும் மீண்டும் விடுவித்து மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

போரின் போது அழிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் உதவும் என்றும், போரின் போது மூடப்பட்ட கிளிநொச்சி பகுதியில் உள்ள வீதிகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“பாதுகாப்பு காரணங்களுக்காக மக்களின் காணிகள் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்பதை நாங்கள் அறிவோம். இது குறித்து இராணுவ அதிகாரிகள் மற்றும் தளபதிகளுடன் நாங்கள் கலந்துரையாடினோம்.

விடுவிக்கப்படக்கூடிய ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மக்களிடம் திருப்பித் தர நாங்கள் செற்படுவோம். அது மட்டுமல்லாமல், பாரம்பரியமாக பயிரிடப்பட்ட சில காணிகள் கூகுள் மேப்ஸைப் பார்த்து வனப் பாதுகாப்புத் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்டன.

இவை இந்தப் பகுதியில் பயிரிடப்பட்ட நிலங்கள், மக்களின் காணிகள், முறையான ஆய்வுக்குப் பிறகு அவற்றைத் திருப்பித் தர நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

மேலும் பல வீதிகளும் மூடப்பட்டுள்ளன. கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் கொழும்பு வீதி திறக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகைக்கு முன்னால் உள்ள வீதி திறக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் வீதிகள் ஏன் மூடப்பட்டுள்ளன?

மக்கள் பயணிக்க அந்த வீதிகள் அனைத்தையும் நாங்கள் திறந்து விடுவோம். யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே ஏராளமான வீதிகளை மீண்டும் திறந்துள்ளோம். இந்த நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்று குறிப்பிட்டார் .

Related posts

ஜெயலலிதா இப்படிதான் நடப்பார் நடித்து காட்டிய விஜயகாந்த்! (விடியோ)

wpengine

கடல் மாசாக்கம், எண்ணைய் கசிவு திட்டம் தொடர்பாக கருத்தரங்கில் அரசாங்க அதிபர் ஸ்டான்லி டீமெல் பங்கேற்பு

wpengine

மண்ணெண்னை கொள்வனவு செய்ய அரசாங்கம் நிதி வழங்க நடவடிக்கை! மனோ கடிதம்

wpengine