பிரதான செய்திகள்

வடக்கில் நாளை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் பணிபுறக்கணிப்பு

பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை கருத்தில் கொண்டு தனியார் போக்குரத்துச் சேவைகள் நாளை (27) முதல் வடமாகாண ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ள வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் குறித்து வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டுள்ளது.

குறித்த துண்டுப்பிரசுரங்களில் மேலும் குறிப்பிடுகையில்,

தனியார் பேரூந்திற்கு 60 வீதமும், இலங்கை அரச போக்குவரத்துச் சேவை பேரூந்திற்கு 40 வீதமும் என்ற விகிதாசாரத்தில் கடந்த 3 வருட கால முயற்சியின் பின் இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரச போக்குவரத்துச் சேவை இதற்கு ஒத்துழைப்பு வழங்காத நிலையில் அத்துமீறிய சேவையினை மேற்கொண்டு வருகின்றது.

இந்த விடயம் தொடர்பாக மத்திய அரசுடனும், மாகாண அரசுடனும் சந்திப்புக்களை ஏற்படுத்தியும் எதுவித பலனும் இதுவரை எமக்கு எட்டப்படவில்லை.

இதனால் எமது பயணிகளின் பாதுகாப்பான பயணத்தினை கருத்தில் கொண்டு நாளை (27-06-2016) தொடக்கம் எமக்கு தீர்வு கிடைக்கும் வரை வடமாகாணம் முழுவதும் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளோம் என வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts

30ஆம் திகதி மன்னாருக்கு புதிய ஆயர்

wpengine

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்கின் பொய் குற்றச்சாட்டுக்களும்,அதற்கான பதிலும்

wpengine

சீனாவின் உரம் இலங்கைக்கு மரண அடியாக மாறும்-கலாநிதி தயான் ஜயதிலக

wpengine