பிரதான செய்திகள்

வடக்கில் அகதிகள் இல்லாத நிலை உருவாக்க வேண்டும் : முஸ்லிம்ளை மறந்த விக்னேஸ்வரன்

வடமாகாணத்தில் அகதிகள் இல்லாத நிலைமையினை அரசாங்கம் உருவாக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் டெய்ஜி டெல் வலியுறுத்தியதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலய பணிப்பாளர் யாழ்.மாவட்டத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவரது செயலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர்,

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் மற்றும் அவரது குழுவினர் அகதிகள் குறித்து ஆராய்வதற்கு வருகை தந்திருந்தனர்.

இதன்போது தெல்லிப்பளை பிரதேசத்தில் அகதிகள் அதிகமாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு எவ்வாறான நன்மைகளைப் பெற்றுக்கொடுக்க முடியுமென ஆராய்ந்தார்.

யாழ். மாவட்டத்தில் தொடர்ந்தும் இராணுவம் இருப்பதனால், இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ந்தும் வரக்கூடும்.

இராணுவ பிரசன்னத்தினாலும், காணிகளை அபகரித்துள்ளமையினாலும், மக்களுக்கு காணிகளை வழங்க முடியாத நிலை காணப்படுவதுடன், யாழ்ப்பாணத்தில் இராணுவம் மக்களின் காணிகளை விட்டுச் சென்றால் மாத்திரமே, மக்கள் தமது காணிகளுக்குச் செல்லும் நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டினேன்.

இந்தியாவில் இருந்தும் மக்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றார்கள். எமது நாட்டு மக்கள், எமது நாட்டிற்கு திரும்பி வருவதை வரவேற்கின்றோம். ஆனால், அவர்களுக்குரிய வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

அவ்வாறு நாட்டிற்கு திரும்பி வரும்போது அவர்களின் காணிகள் வேற்று இன மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை அவதானிப்பதனால், அவர்கள் பெரும் பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றார்கள்.

குடியமர்த்தியவர்களை வெளியேற்றாமல் மாற்றுக்காணி தருவதாக கூறிவருகின்றார்கள். இவை அனைத்தும் அவர்களுக்கு பல விதமான பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

 

இந்நிலையில், அவர் நாட்டில் அகதிகள் இல்லாத நிலையினை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது நாட்டில் அகதிகள் இல்லாத நிலை ஏற்படுகின்றதா என்பது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் அவதானிக்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

இந்தியாவில் இருந்து வருகை தரும் இலங்கை அகதிகளுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்க ஐக்கிய நாடுகள் அலுவலகமும் முன்வர வேண்டுமென்று கோரிக்கை முன்வைத்துள்ளேன்.

அவற்றினைப் பரிசீலித்து வருகின்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

முன்னால் அமைச்சர் றிஷாட் தொடர்பில் அரசியல்வாதிகள் தெரிவித்த கருத்து

wpengine

சென்னை விமான நிலையத்தில் இலங்கையர்கள் இருவர் மாரடைப்பால் உயிரிழப்பு!

Editor

வாட்ஸ் அப்பில் வீடியோ வசதி

wpengine