பிரதான செய்திகள்

வடக்கின் புதிய ஆளுநராக தமிழன் மஹிந்த நடவடிக்கை

வட மாகாணத்தின் புதிய ஆளுநராக தமிழரான சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.வித்தியாதரனை தெரிவு செய்வதற்கு புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தேசித்துள்ளதாக மஹிந்தவுக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து அறிய முடிகின்றது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த சகோதரியான நிருபமா ராஜபக்ஷவின் கணவரான திருகுமார் நடேசனுடைய நெருங்கிய சகாவான சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரனை வட மாகாணத்தின் புதிய ஆளுநராக தெரிவு செய்வதற்கு திருகுமார் நடேசன் அழுத்தம் கொடுத்துள்ளார் எனவும், இதனால் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மைப் பலத்தை நிரூபித்த அடுத்த கணம் சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரனை வட மாகாணத்தின் ஆளுநராக தெரிவு செய்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ இணங்கி இருக்கின்றார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை இரவு புதிய பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றவுடன் மறுநாள் சனிக்கிழமை கொழும்பிலுள்ள தனது விஜேராம இல்லத்துக்கு வித்தியாதரனை அழைத்திருந்த மஹிந்த, அவருடன் வடக்கின் நிலைமைகள் தொடர்பில் பேச்சு நடத்தியிருந்தார்.

வட மாகாண ஆளுநர் விடயம் தொடர்பில் வித்தியாதரனுடன் இன்று தொடர்பு கொண்டு கேட்டபோது, “செய்தி கிடைத்தால் போடுங்கள்” என்று சிரித்தபடி பதிலளித்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆலோசராக இருந்து சுகயீனம் காரணமாக இலண்டனில் மரணித்த ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கத்தின் நெருங்கிய நண்பரான சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.வித்தியாதரன், கொழும்பில் வைத்து பட்டப்பகலில் வெள்ளை வானில் கடத்தப்பட்டிருந்தார்.

பின்னர் சர்வதேச ஊடக அமைப்புகள் மற்றும் வெளிநாடுகளின் கடும் அழுத்தங்களினால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

“சுதந்திர வர்த்தக உடன்பாடு வர்த்தகத்தில் மற்றொரு படிக்கல்லாக அமையும்” அமைச்சர் றிஷாட்

wpengine

ISIS தீவிரவாதிகளை வீழ்த்துவதில் முஸ்லிம்களுக்கு முக்கிய பங்குண்டு -அமெரிக்க அதிபர் ஒபாமா

wpengine

65 ஆயிரம் வீடுகள் திட்டத்துக்கு தடங்கல் இல்லை: அமைச்சர் சுவாமிநாதன்

wpengine