வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது!

வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று மாலை இரகசிய பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

வசீம் தாஜுதின் கொலை தொடர்பில் சாட்சிகளை மறைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் OIC சுமித் பெரேரா என்ற அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான நிலையில் தற்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை தற்போது பரபரப்பாக உள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares