பிரதான செய்திகள்

வசீம் தாஜுடீனின் கொலை! சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை கைது நடவடிக்கை

பிரபல றகர் வீரர் வசீம் தாஜுடீனின் கொலை சம்பவம் தொடர்பில் மேலும் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்படவுள்ளார்.

இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் மேலும் ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மற்றும் இராணுவ அதிகாரியை கைது செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இரண்டு அதிகாரிகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுடன் குற்ற விசாரணை திணைக்களம் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலந்துரையாடலின் தீர்மானித்திற்கமைய சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை கிடைத்தவுடன் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

தாஜுடீன் கொலை தொடர்பில் ஜனாதிபதி செயலக தொலைபேசி அழைப்பு தொடர்பில் நீண்ட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விசாரணையின் மூலம் கொலையின் ஆரம்ப தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

கொலை இடம்பெற்ற பகுதியில் பெற்றுக்கொண்ட சீ.சீ.டீ.வி காணொளியை எதிர்வரும் 22ஆம் திகதி ஆய்விற்காக கனடாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள நிலையில் அதன் மூலம் கொலையாளிகள் தொடர்பில் உண்மையாக தகவல் வெளியாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

வடக்கு, கிழக்கில் மொட்டு சின்னத்தை கைவிடும் பொதுஜன பெரமூன! இறுதி தீர்மானம் வியாழன்

wpengine

மஹியங்கனை கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஞானசார தேரர் (விடியோ)

wpengine

மின்சார பாவனையாளர்களுக்கு வட்டி செலுத்த பரிந்துரை

wpengine