வங்காலை மீனவர்களுக்கு கடல்பாசி வளர்ப்புத்திட்டம் -டெனிஸ்வரன்

(முகநுால்)
நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்க்குட்பட்ட வங்காலை கிராமத்தில் உள்ள மக்களுக்கு வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சினால் கடற்ப்பாசி வளர்ப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் நேற்று (06-03-2016) ஞாயிறு மாலை 5 மணியளவில் வங்காலைக் கிராமத்துக்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் அங்குள்ள மக்களை சந்தித்து சுமார் 25 பயனாளிகளுக்கு திட்டத்துக்கான மூலப்பொருட்களை வழங்கிவைத்தார்.
நிகழ்விற்கு வங்காலைப் பங்குத் தந்தை அருட் தந்தை எஸ்.ஜெயபாலன் அவர்களும், வங்காலைக் கிராமிய மீனவர் அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர், ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.