உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

லெபனான் நாட்டுக்கு எதிராக சவுதி அரேபியா போர் பிரகடனம்.

லெபனானுக்கு எதிராக சவுதி அரேபியா போரை அறிவித்திருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

லெபனான் பிரதமர் சாத் ஹரிரி, அண்மையில் சவுதி அரேபியா சென்ற நிலையில் தாம் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.

தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் தாம் பதவி விலகுவதாகக் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் சவுதி அரசாங்கத்தின் நிர்ப்பந்தத்தினாலேயே கஹரிரி பதவி விலகியதாக, லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா ஷியா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா குற்றம் சுமத்தியிருந்தார்.

சவுதியில் தங்கியுள்ள சாத் ஹரிரி நாடு திரும்ப வேண்டும் என லெபனான் நாட்டின் பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்துவருகின்றனர்.

லெபனான் பிரதமர் சாத் ஹரிரி சௌதி பதவி விலகலை அறிவித்து சில நாட்கள் கடந்துள்ள நிலையில், லெபனான் நாட்டுக்கு எதிராக சவுதி போர் பிரகடனம் செய்துள்ளதாக ஹசன் நஸ்ருல்லா குற்றம் சுமத்தியுள்ளார்.

சவுதி அரேபியா லெபனானுக்கு எதிராக இஸ்ரேலை தூண்டுவதாகவும், லெபனானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையில் ஈடுபட, இஸ்ரேலுக்கு பில்லியன் கணக்கிலான பணத்தை கொடுக்க சவுதி தயாராகி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related posts

சாதாரண பிள்ளையானுக்கு எங்கிருந்து வந்தது? வேறு ஒருவரின் வீட்டில் வாழும் பிள்ளையான்

wpengine

கொழும்பு புறக்கோட்டையில் சிவப்பு பள்ளிக்கு அருகில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து..!

Maash

முஸ்லிம் சமுகத்தின் விரோதிக்கு முகா. மேடையில் முடிசூட்டு விழா !

wpengine