றிஷாட் வெளிநாடு செல்ல முடியாது தடை

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டுக்காகவே ரிஷாத் பதியூதீன் உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு தலைமை நீதிவான் பிரியந்த லியனகே இந்த தடையுத்தரவினை பிறப்பித்துள்ளார்.


ரிஷாத் பதியூதினை கைதுசெய்ய குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் உட்பட பல பொலிஸ் குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன.


இதேவேளை இக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ரிஷாத் பதியூதீனின் கணக்காளரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதற்கிடையில் ரிஷாத் பதியுதீனின் பாதுகாப்பு விவகாரங்களுடன் இணைக்கப்பட்ட ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளும் நேற்று வெள்ளவத்தை பகுதியில் கைதுசெய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares