றிஷாட் வில்பத்து காடழிப்பு!இன்று நீதி மன்ற வழக்கு

வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள மறிச்சிகட்டு வனப்பகுதிக்கு சொந்தமான பிரதேசத்தில் காடழிப்பு மேற்கொண்டு அனுமதியற்ற கட்டுமானங்களை மேற்கொண்டமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் நீதி மையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு இன்று (24) அழைக்கப்பட்ட போது ஜனக் டி சில்வா மற்றும் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன ஆகிய நீதிபதிகள் அடங்கிய மேன்முறையீட்டு நீதிபதிகள் குழாமினால் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares