பிரதான செய்திகள்

றிஷாட் பதியுதீன் முசலிக்கு 52.80மில்லியன் நிதி ஒதுக்கீடு! வேலைத்திட்டம் ஆரம்பம்

கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சின் முன்னால் அமைச்சரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிஷாட் பதியுதீன் மன்னார், முசலி பிரதேசத்திற்கு 52.80மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்த நிதிக்கான உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைகள் தற்போது முசலி பிரதேசத்தில் நடைபெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் முன்னால் அமைச்சர் றிஷாட் மீது அரசியல் ரீதியாக கோபம்கொண்ட அரசியல்வாதிகள் இதனை தடுக்கும் நோக்குடன் பல்வேறு சதிகளையும் மேற்கொண்டுள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.

இது போன்று முசலி பிரதேசத்தில் உள்ள மக்களின் வீட்டுத்திட்ட தேவையினை பூர்த்தி செய்துகொள்ளும் நோக்குடன் மீள்குடியேற்ற செயலணி ஊடாக 700வீடுகளையும் வழங்கி இதற்கான வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வேலைகளும் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

Related posts

ஊழல், மோசடிகளை மறைக்கும் சாகல ரத்நாயக்க, விஜேதாச

wpengine

கல்முனை மாநகரத்தை துண்டாடும் தீர்மானம் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

wpengine

வங்குரோத்து வாதிகள் என் மீது பொய் பிரச்சாரங்களை மேற்கொள்ளுகின்றார்கள்

wpengine