றிஷாட் சர்வதேச அரபு பாடசாலைகளை அமைத்துள்ளார் ஞானசார தேரர்

இந்த நாட்டில் அடிப்படைவாதிகளால் ஸ்தாபிக்கப்பட்ட 30 சர்வதேச அரபு பாடசாலைகள் செயற்பட்டு வருவதாக பொதுபலசேனவின் செயலாளர் கலகொடஅத்து ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.


உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசராணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,

இந்த சர்வதேச அரபு பாடசாலைகள் அனைத்தும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனினால் துருக்கி அரசின் உதவியுடன் ஸ்தாபிக்கப்பட்டவை.
திஹாரி, புத்தளம், மாவனல்லை ஆகிய பிரதேசங்களிலேயே இவை ஸ்தாபிக்கப்பட்டு அவற்றின் பிரதானிகளாக ஜமாதே இஸ்லாமி போன்ற அடிப்படைவாத அமைப்புகள் செயற்படுகின்றன.


இருப்பினும் இந்தப் பாடசாலைகளின் பெயர்கள் அடிக்கடி மாறற்றப்பட்டு அவை தொடர்பான சரியான தகவல்களை பெறுவதில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்றும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares